தமிழ் திரையுலகில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக அறிமுகமானவர் நடிகர் சதீஷ். தனது எதார்த்தமான காமெடியால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 168 திரைப்படத்தில் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். 

Sathish

இந்நிலையில் நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இவரது வீட்டு அபார்ட்மென்ட்டில் செக்யூரிட்டியாக பணியாற்றிய பாலுசாமி என்பவர் தற்போது வேலம்மாள் பள்ளியில் தமிழ் ஆசியராக சேர்ந்துள்ளாராம். தனது கடின உழைப்பால் ஆசிரியர் பணியில் அமர்ந்திருக்கும் அவரை தனது வீடியோவில் பேசவைத்துள்ளார் சதீஷ். 

sathish

சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகிய ராஜவம்சம் படத்தில் ஓர் பாடலை பாடியுள்ளார். சதீஷ் கைவசம் ராஜவம்சம், டெடி, தீமைதான் வெல்லும் போன்ற படங்கள் உள்ளது.