தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித் தொடர்ந்து நடிகர் கார்த்தியின் மெட்ராஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி & காலா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தனது ஒவ்வொரு திரைப்படங்களின் மூலமும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் அநீதி மற்றும் அவர்களின் வாழ்வியலையும் படமாக்கும் பா.ரஞ்சித் இந்த முறை எடுத்திருக்கும் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் 1980களில் பிரபலமான வடசென்னையில் குத்துச்சண்டை கலாச்சாரத்தை மையப்படுத்தி கதைக்களத்தை அமைத்திருக்கிறார்.

நடிகர் ஆர்யா கபிலன் எனும் கதாபாத்திரத்தில் குத்துச்சண்டை வீரராக நடிக்க அவருடன் இணைந்து துஷாரா விஜயன், சஞ்சனா நட்ராஜன், அனுபமா குமார், கலையரசன் ஆகியோருடன் இணைந்து நடிகர் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் K9 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் சார்பட்டா பரம்பரை படத்தில் ஒளிப்பதிவாளர் முரளி.ஜி ஒளிப்பதிவு செய்ய முன்னணி இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்

அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வருகிற ஜூலை 22-ஆம் தேதி நேரடியாக வழியாகும் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் அதிரடியான டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்த  நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது. நீயே ஒளி எனும்  முதல் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகிறது. அந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.