இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டரான திரைப்படம் துப்பாக்கி. இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கென தனி வரவேற்பு உண்டு.

thuppaki2

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தீபாவளி பட்டாசாக வெடித்த படம் பிகில். ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்ற இப்படம் ஹவுஸ்-ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

santhoshsivan

இதனிடையே, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது ட்விட்டரில், பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசிய வீடியோவை பகிர்ந்து, அருமையான பேச்சு சார். துப்பாக்கி 2 படத்திற்காக க்காக காத்திருக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார். இதனால் நிச்சயம் துப்பாக்கி 2 என்ற மகிழ்ச்சியில் உள்ளனர் விஜய் ரசிகர்கள்.

santhoshsivan santhoshsivan

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு 2020 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவிருக்கிறது.