அடுத்தடுத்து வரிசையாக நகைச்சுவை மையப்படுத்திய கலகலப்பான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் நடிகர் சந்தானம் முன்னதாக தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள #SANTA15 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில் அடுத்ததாக மேயாதமான் & ஆடை ஆகிய திரைப்படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் குலுகுலு.

சந்தானத்துடன் இணைந்து அதுல்யா சந்த்ரா கதாநாயகியாக நடிக்க, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத் ,மரியம் ஜார்ஜ், லொள்ளுசபா மாறன், லொள்ளுசபா சேஷு, TSR ஆகியோர் குலு குலு படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். 

சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள குலு குலு திரைப்படம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட வருகிற ஜூலை 29-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் குலுகுலு திரைப்படத்திலிருந்து Sneak Peek வீடியோ தற்போது வெளியானது. கவனத்தை ஈர்க்கும் அந்த Sneak Peek வீடியோ இதோ…