தமிழ் சினிமாவின் நட்சத்திர நகைச்சுவை நாயகனாக கலக்கிய நடிகர் சந்தானம் தற்போது கதாநாயகனாகவும் அசத்தி வருகிறார். தொடர்ந்து நகைச்சுவை மையப்படுத்திய கலகலப்பான காமெடி எண்டர்டெயினர் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சந்தானம் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

முன்னதாக தெலுங்கு சூப்பர் ஹிட்டான ஏஜென்ட் சாய் சீனிவாச ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காக சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ள நிலையில் அடுத்ததாக பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள #SANTA15 திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த வரிசையில் சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்க, மேயாதமான் & ஆடை ஆகிய திரைப்படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள குலுகுலு திரைப்படம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட நாளை (ஜூலை 29-ம் தேதி) உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

சந்தானத்துடன் இணைந்து அதுல்யா சந்த்ரா கதாநாயகியாக நடிக்க, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத் ,மரியம் ஜார்ஜ், லொள்ளுசபா மாறன், லொள்ளுசபா சேஷு, TSR ஆகியோர் குலு குலு படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். 

பக்காவான காமெடி-ஆக்ஷன் எண்டர்டெயினர் திரைப்படமாக தயாராகியிருக்கும் குலு குலு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குலு குலு திரைப்படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Route clear. 🙌🥳. After crossing all the hurdles #GuluGulu is certified U/A. #GuluGuluFromTomorrow @iamsanthanam@Music_Santhosh@Lyricist_Vivek@KVijayKartik @philoedit @jacki_art@athulya_chandra@namikay1 @circleboxE@RedGiantMovies_ @rajnarayanan_ @SonyMusicSouth pic.twitter.com/1pZSqnDp7X

— Rathna kumar (@MrRathna) July 28, 2022