மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய திரைப்படங்களில் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்த இயக்குனர் ரத்னகுமார் நல்ல வசனகர்த்தா மற்றும் திரைக்கதை ஆசிரியராகவும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் உலகநாயகன் கமல் ஹாசன் நடித்த விக்ரம் ஆகிய திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

அந்த வகையில் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அடுத்த பக்கா ஆக்சன் காமெடி திரைப்படமாக தயாராகியுள்ளது குலு குலு திரைப்படம். நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, அதுல்யா சந்த்ரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத் ,மரியம் ஜார்ஜ், லொள்ளுசபா மாறன், லொள்ளுசபா சேஷு, TSR ஆகியோர் குலு குலு படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள குலுகுலு திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட குலு குலு திரைப்படம் வருகிற ஜூலை 29-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இதுவரை குலுகுலு திரைப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் மற்றும் டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த நிலையில், முன்னதாக வெளியான குலு குலு படத்தின் Sneak Peek வீடியோ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குலு குலு திரைப்படத்திலிருந்து தற்போது அம்மா நா நா எனும் பாடல் வெளியாகியுள்ளது.  கலக்கலான அந்த பாடல் இதோ…