தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி.தற்போது சங்கத்தமிழன்,லாபம்,VSP 33.தளபதி 64 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.சங்கத்தமிழன் படத்தை வாலு,ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியுள்ளார்.

Sangathamizhan Release Issue Libra Prod Tweet

விவேக் மெர்வின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ்,ராஷி கண்ணா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.சூரி,ஸ்ரீமன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

Sangathamizhan Release Issue Libra Prod Tweet

விஜயா ப்ரொடுக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை லிப்ரா ப்ரொடுக்ஷன்ஸ் கைப்பற்றியுள்ளனர்.இந்த படம் நாளை வெளியாகவுள்ளது.இந்த படம் ரிலீசாகிறதா இல்லையா என்பது இன்னும் தெளிவாகவில்லை என்று பலரும் தெரிவித்து வந்தனர்.தற்போது லிப்ரா ப்ரொடுக்ஷன்ஸ் வீண் வதந்திகளை நம்பவேண்டாம் திட்டமிட்டபடி படம் வெளிவரும் என்று தெரிவித்துள்ளனர்.