எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளியான திரைப்படம் பேராண்மை. இந்த படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தவர் சாய் தன்ஷிகா. இவர் கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பட படங்களில் நடித்துள்ளார். பரதேசி, நில் கவனி செல், திறந்திடு சீசே,உரு, காத்தாடி, காலக்கூத்து உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் இவரது நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. தற்போது யோகிடா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஆக்ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து வரும் சாய் தன்ஷிகா, அந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளார். 

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள 3 வீடியோக்களில் அந்தரத்தில் டைவ் அடுக்கும் ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் காட்சிகளை அவர் பதிவிட்டுள்ளார். மகளிர் தின ஸ்பெஷலாக இந்த ஆக்ஷன் வீடியோக்களை அவர் வெளியிட்டுள்ளார்.

வீடியோக்களுடன் மகளிர் தின வாழ்த்து பதிவிட்டுள்ள சாய் தன்ஷிகா, தங்கள் தனித்துவத்திற்காக வலிமையாக, துணிச்சலாக, நம்பிக்கையுடன் போராடி வரும் பெண்கள் அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள். வாழும் உதாரணங்களாக இருக்கும் பெண்களுக்கும், அவர்கள் பயணத்தில் துணையாக இருக்கும் ஆண்களுக்கும் எனது வாழ்த்துக்கள். எனது அடுத்த படமான யோடா படத்திற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

சாய் தன்ஷிகாவின் இந்த ஆக்ஷன் வீடியோக்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சாய் தன்ஷிகா கைவசம் லாபம் திரைப்படம் உள்ளது. விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhanshika (@saidhanshika)