தமிழ் திரையுலகில் இளம் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். பியார் ப்ரேமா காதல், இஸ்பேடுராஜாவும் இதயராணியும் போன்ற படங்களால் இளைஞர்கள் விரும்பும் நாயகனாக திகழ்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தாராள பிரபு திரைப்படம் ஊரடங்கு காரணமாக திரையரங்கில் ஓட முடியாமல் போனது, இருந்தாலும் ஆன்லைனில் அசத்தலான வரவேற்பு கிடைத்தது.

Harish Kalyan

இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு வந்த ட்விட்டர் ரிப்ளை அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒவ்வொரு வருடமும் தவறாமல் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார். சச்சினின் தீவிர ரசிகரான இவர் இந்த வருடமும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். 

Harishkalyan Story

இதனிடையே ஹரிஷ் கல்யாணின் இந்த பதிவுக்கு சச்சின் நன்றி தெரிவித்து பதிலளித்துள்ளார். ஹரிஷ் கல்யாண் இந்த ரிப்ளையால் ஓவர் குஷியில் உள்ளார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அந்த கடவுளே பதிலளித்த தருனம் என பதிவு செய்துள்ளார்.