காதல் வைரஸ் படத்தின் மூலம் தமிழ் திரையில் ஹீரோவாக கால் பதித்தவர் நடிகர் ரிச்சர்ட். நடிகை ஷாலினியின் தம்பியான ரிச்சர்ட் ரிஷியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் திரௌபதி. பழைய வண்ணாரப்பேட்டை திரைப்பட புகழ் இயக்குனர் ஜி.மோகன் இந்த படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். 

draupathy

இப்படம் உண்மை சம்பவத்தை கதைகளமாக கொண்டுள்ள திரைப்படமாகவும் அமைந்துள்ளது. தேசிய விருது பெற்ற டூ லெட் திரைப்படத்தின் கதாநாயகி ஷீலா ராஜ்குமார் நாயகியாக நடித்துள்ளார். நடிகர் கருணாஸ் இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். 

richard richard

மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜூபின் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது. பிப்ரவரி 28-ம் தேதி ரிலீஸாகவிருக்கும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது இந்த படம் உருவான விதம் குறித்து கலாட்டா குழுவுடன் பகிர்ந்து கொண்டார் நாயகன் ரிச்சர்ட். இப்போது இருக்கும் சினிமா முற்றிலும் வேறு. காலத்திற்கு ஏற்றார் போல் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறினார். ஒரு வருடத்திற்கு மேல் இந்த படத்தை செய்து வருகிறோம். ரசிகர்கள் விரும்பும் படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். ஃபிளாஷ் பேக் காட்சிகள் இருப்பதால் இரண்டு கெட்டப்பில் போகலாம் என்று முடிவு செய்தோம். குறைந்த பட்ஜெட் என்பதால் கஷ்டங்கள் அதிகமாக இருந்தது.