கடந்த 2016-ம் ஆண்டு நிவின் பாலி நடித்த ஜகோபிண்டே ஸ்வர்கராஜ்யம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ரெபா மோனிகா ஜான். தமிழில் ஜருகண்டி என்ற படத்தில் ஜெய் ஜோடியாக நடித்திருந்தார். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானார். அதன் பிறகு தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்தார். 

rebamonicajohn

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நேரத்தில் மக்கள் தங்கள் பணிக்கு திரும்பாமல் அவதி படுகின்றனர். திரைப்பிரபலங்களும் தங்கள் படப்பிடிப்பிற்கு செல்ல இயலாமல் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ளனர். ரசிகர்களுடன் லைவ்வில் தோன்றியும், அவர்கள் பணிபுரிந்த படங்களின் அனுபவம் குறித்தும் பதிவு செய்து வருகின்றனர். 

RebaMonicaJohn

இந்நிலையில் ரெபா டிக்டாக்கில் ஆங்கில இசைக்கு நடனமாடி பதிவு செய்துள்ளார். இந்த டிக்டாக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிப்பை தவிர்த்து நடனத்திலும் பட்டையை கிளப்பும் ரெபாவை பாராட்டி வருகின்றனர் நெட்டிசன்கள். ரெபா கைவசம் FIR, மழையில் நனைகிறேன் போன்ற படங்கள் உள்ளது. 

@reba_john04

Just had to do it!! haha ✨😁 ##sirenbeat ##trend ##rebajohn

♬ Laxed Siren Beat Loop - Jawsh 685