ஒரு ரசிகனா ரொம்ப கஷ்டமா இருக்கு ! இயக்குனர் ரத்னகுமார் பதிவு
By Sakthi Priyan | Galatta | April 09, 2020 12:25 PM IST

கடந்த 2017-ம் ஆண்டு மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ரத்னகுமார். வைபவ், பிரியாபவானி மற்றும் இந்துஜா நடிப்பில் வெளியான இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு 2019-ம் ஆண்டு அமலா பால் வைத்து ஆடை எனும் படத்தை இயக்கினார்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்துள்ளார். XB நிறுவனம் தயாரிப்பில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையைத்துள்ளார். மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ள நிலையில், படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலருக்கு காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
இந்நிலையில் இயக்குனர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா வைரஸ் பிரச்சனை இல்லையென்றால், மாஸ்டர் இந்நேரம் ரிலீஸ் ஆகியிருக்கும், பல சோகமான ட்வீட்டுகளை பார்க்க முடிகிறது. ஒரு ரசிகனாக இது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும், உயிர் பிழைத்திருப்பதே இப்போது முக்கியம், கொண்டாட்டம் எல்லாம் பிறகு என பதிவிட்டு, மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Harish Kalyan tells fans that he has a crush on Rashmika Mandanna! Check Out!
09/04/2020 12:48 PM
Popular American actor dies of COVID-19
09/04/2020 04:19 AM
Director's latest statement on Master's release | Thalapathy | Vijay
09/04/2020 04:17 AM