கடந்த 2017-ம் ஆண்டு மேயாத மான் எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ரத்னகுமார். வைபவ், பிரியாபவானி மற்றும் இந்துஜா நடிப்பில் வெளியான இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

rathnakumar

அதன் பிறகு 2019-ம் ஆண்டு அமலா பால் வைத்து ஆடை எனும் படத்தை இயக்கினார். திரில்லர் படமான இந்த படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிகிறார். 

rathnakumar

தனுஷ் நடித்த பட்டாஸ், மிஸ்கின் இயக்கத்தில் உருவான சைக்கோ, சூர்யாவின் சூரரைப் போற்று ஆகிய படங்களின் ட்ரைலரை பார்த்தவர், நிச்சயம் 2020-ஆண்டு கோலிவுட்டின் சிறந்த ஆண்டாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் தர்பார், மாஸ்டர், வலிமை போன்ற படங்கள் ரிலீஸ் பட்டியலில் உள்ளதால் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை அதிகம் எதிர்பார்க்கலாம் என்று பதிவு செய்துள்ளார்.