டிஸ்கவரி தொலைக்காட்சியின் பிரபலமான தொடர்களில் ஒன்று மேன் வெர்சஸ் வைல்ட்.இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் க்ரில்ஸ் உலகளவில் மிகவும் பிரபலமானவர்.காட்டுக்குள் தனியாக சுற்றித்திரியும் இவரது ஷோ மிகவும் வைரலானது.

Rajinikanth in Man Vs Wild Show With Bear Grylls

கடந்த வருடம் இவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்திய மேன் வெர்சஸ் வைல்ட் சிறப்பு தொகுப்பு பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.பந்திபூரில் அமைந்துள்ள சரணாலயத்தில் இந்த ஷூட்டிங் நடைபெறவுள்ளது என்று தெரியவந்துள்ளது.தற்போது ரஜினிகாந்த் கர்நாடகாவில் உள்ள பந்திபூரை அடைந்துள்ளார்.

Rajinikanth in Man Vs Wild Show With Bear Grylls

தர்பார் படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிவா இயக்கத்தில் தயாராகிவரும் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது.இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.