பேய் பட பிரியர்களின் கவனத்தை ஈர்த்த முக்கிய படம் காஞ்சனா.ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த இந்த படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து இதன் அடுத்த பாகங்கள் உருவாகின இந்த படத்தின் மூன்றாம் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Raghava Lawrence Next Movie Music By GV Prakash

இதனை தொடர்ந்து ஹிந்தியில் முன்னணி நடிகரான அக்ஷய் குமார் நடிக்கும் காஞ்சனா ஹிந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார்.தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Raghava Lawrence Next Movie Music By GV Prakash

இந்த படத்தை பொல்லாதவன்,ஆடுகளம்,ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களை  பைவ் ஸ்டார் கிரேஷன்ஸ் சார்பாக எஸ்.கதிரேசன் தயாரிக்கிறார்.ஜீ.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தின் இயக்குனர் மற்றும் பிற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Raghava Lawrence Next Movie Music By GV Prakash