கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக மாவட்டங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டடுள்ளது. அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பயணம் செய்கின்றனர். குறிப்பாக மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வோர்கள் என அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பயணிக்கின்றனர். 

Radha Ravi Quarantined In Kothagiri With Family

கொரோனா பாதிப்பில் சிவப்பு நிற மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னையிலிருந்து கோத்தகிரிக்கு வந்திருப்பதால் நகராட்சி சுகாதாரப் பிரிவின் அறிவுறுத்தலின்படி வீட்டில் 14 நாள்களுக்கு ராதாரவியும் அவருடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அடையாள அட்டையை நகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் அவரது வீட்டின் சுவரில் ஒட்டியதாகவும் கூறப்படுகிறது.

Radha Ravi Quarantined In Kothagiri With Family

இது தொடர்பாக நடிகர் ராதாரவி வெளியிட்டுள்ள வீடியோவில், அதில், என்னை பற்றி பொய்யான செய்திகள் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில் என்னிடம் பல பேர் போன் செய்து நலம் விசாரித்தார்கள். அவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றாக இருக்கிறேன் என்பதை சொல்லிக்கொள்கிறேன். 

எல்லோரையும் தனிமைப்படுத்தி தான் ஆகவேண்டும். வேறு மாவட்டத்தில் இருந்து இந்த மாவட்டத்துக்கு வந்தால் தனிமைப்படுத்துவார்கள். 14 நாட்கள் தனிமையில் இருக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். அதற்கு ஒத்துக்கொண்டால் தான் வர முடியும். இங்கே என் வீடு இருக்கிறது. அதனால் வந்திருக்கிறேன். நான் தனிமையில் தான் இருப்பேன். கலெக்டருக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் எனது நன்றி என்று பேசியுள்ளார்.