தமிழ் திரையின் கனவு கன்னியாக இன்று வரை நீடித்து இருக்கும் நடிகை த்ரிஷா. இவரது கைவசம் கர்ஜனை, பரமபதம் விளையாட்டு, சதுரங்க வேட்டை 2 போன்ற படங்கள் உள்ளது. எங்கேயும் எப்போதும் புகழ் இயக்குனர் சரவணன் இயக்கும் ராங்கி படத்தில் நடிக்கவிருக்கிறார் த்ரிஷா. லைக்கா தயாரிக்கும் இந்த படத்திற்கு சத்யா இசையமைக்கிறார்.

raangi

உஸ்பகிஸ்தானில் எடுக்கப்பட்டு வந்த படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்ததாக தகவல் தெரியவந்தது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் கதை வசனம் எழுதியுள்ளார். சமீபத்தில் இதன் டீஸர் வெளியாகி அசத்தியது. 

trisha

இந்த படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார் த்ரிஷா. ஆக்ஷன் த்ரில்லராக உருவெடுத்திருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக மிகுந்த ஆவலில் உள்ளனர் த்ரிஷா ரசிகர்கள்.