உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளியான திரைப்படம் சைக்கோ. மிஸ்கின் இந்த படத்தை இயக்கினார். விஷால் வைத்து துப்பறிவாளன் 2 படத்தின் இறுதிகட்ட பணிகளில் பணிபுரிந்து வருகிறார் மிஸ்கின். கடந்த ஆண்டு சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார். 

prasanna adithiraohydari

இதில் பார்வையற்றவ இசை கலைஞராக நடித்து அசத்தியுள்ளார் உதயநிதி. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தார். இந்த படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்தது. இதில் இயக்குனர் ராம், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவிருப்பதாக இருந்தது பின்பு சில காரணத்தால் அவருக்கு பதிலாக தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார் என்பது தெரியவந்தது. 

psycho psycho

தற்போது படத்திலிருந்து உன்ன நெனச்சு பாடல் வீடியோ வெளியானது. சித் ஸ்ரீராம் பாடிய இந்த பாடல் வரிகளை கபிலன் எழுதியுள்ளார்.