தமிழ் சினிமாவில் பிரபலமான விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் பிரபலமானவர் ரவீந்தர் சந்திரசேகர்.நலனும் நந்தினியும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளராக பிரபலமானார் ரவீந்தர் சந்திரசேகர்.மேலும் பல சூப்பர்ஹிட் படங்களை விநியோகம் செய்தும் அசத்தியுள்ளார்.

கவின் நடித்த நட்புன்னா என்னன்னு தெரியுமா,சமுத்திரக்கனியின் சாட்டை 2 உள்ளிட்ட முக்கிய படங்களை விநியோகம் செய்துள்ளார்,அடுத்ததாக சாந்தனு,அதுல்யா ரவி நடித்துள்ள முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தினை தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.இந்த படத்தினை தவிர கவின் நடித்துள்ள லிப்ட்,ஜீ வி பிரகாஷ் நடித்துள்ள ஐங்காரன் உள்ளிட்ட படங்களின் விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளார் ரவீந்தர்.

இவரது குழுவில் ப்ரொடக்ஷன் மேனேஜராக பணியாற்றி வந்த மனோகர் என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என்ற தகவலை ரவீந்தர் பகிர்ந்துள்ளார்.இவர் விஜய் டிவி தொடர்களிலும் வேலைபார்த்துள்ளார் என்பதால் கானா காணும் காலங்கள் தொடரில் புலியாக நடித்து அசத்திய ராகவேந்திராவும் இவருக்கு இரங்கல்களை தெரிவித்துள்ளார்.தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சத்யா தொடரை இவர் தயாரித்து வருகிறார் ஜீ தமிழ் மற்றும் சத்யா சீரியல் பிரபலங்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raghavendran Puli (@raghavendranpuli_official)