கடந்த 2017- ம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் புரட்சி தளபதி விஷால் நடிப்பில் வெளியான படம் துப்பறிவாளன். புகழ் பெற்ற ஷெர்லாக் ஹோம்ஸ் சீரிஸ் பாணியில் உருவான இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, பாக்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

Vishal

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே விஷால் மற்றும் மிஷ்கின் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, படத்திலிருந்து மிஷ்கின் விலகினார். 

Prasanna

இந்நிலையில் நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அப்போது, மிஷ்கின் இல்லாமல் துப்பறிவாளன் எப்படி இருக்கும் என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, துரதிர்ஷ்டவசமாக அவர் இந்த படத்தில் இல்லை. அதற்காக நான் வருந்துகிறேன். அதே நேரம் விஷால் சிறப்பானதை தருவார் என நம்புகிறேன். அவரிடம் நிருபிக்கபட வேண்டியவை நிறையவுள்ளது என தெரிவித்துள்ளார். மிஷ்கின் விலகியதையடுத்து, துப்பறிவாளன்-2 படத்தை விஷால் இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.