பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகி ,இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தின.

சாஹோ படத்தை தொடர்ந்து பிரபாஸ் ராதே ஷ்யாம்,ப்ராஜெக்ட் கே,சலார்,ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.சலார் படத்தினை கே.ஜி.எப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்குகிறார்.homable films இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இந்த படமும் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஜி எப் இயக்குனருடன் பிரபாஸ் இணைவதால் இந்த படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு உள்ளது.இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

கொரோனா பாதிப்பை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதெராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஸ்ருதிஹாசன் இயக்குனருடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது