தமிழ் சினிமாவின் 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராகவும்,குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி.வைகைப்புயல் வடிவேலுவுடன் பல படங்களில் காமெடியில் அசத்தி ரசிகர்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்தவர்.

Popular Comedy Actor KrishnaMoorthy Passes Away

நான்,நான் கடவுள் போன்ற படங்களில் தனது குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்திய இவர்.வடிவேலுவுடன் தவசி படத்தில் அடித்த இந்த அட்ரஸ் எங்க இருக்கு என்ற காமெடி இன்றும் ரசிகர்கள் நெஞ்சங்களில் நீங்காமல் இடம்பிடித்துள்ளது.

Popular Comedy Actor KrishnaMoorthy Passes Away

55 வயதான இவர் தேனி அருகே நடைபெற்று வந்த படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு இவர் இயற்கை எய்தினார் என்ற செய்தி கிடைத்துள்ளது.கலாட்டா சார்பாக க்ரிஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Popular Comedy Actor KrishnaMoorthy Passes Away