சியான் விக்ரம் நடிக்கும் 58-வது படத்தை டிமாண்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் பட புகழ் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் வைகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ajaynyanamuthu

ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் சமீபத்தில் இணைந்தார். ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார்.

chiyaan58

srinidhishetty

தற்போது சூப்பர் சிங்கர் புகழ் மழலை பாடகர் பூவையார் ஒரு பாடல் பாடவுள்ளார் என்ற தகவல் நெருங்கிய திரை வட்டாரம் மூலம் தெரியவந்தது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.