தமிழ்,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் ரெஜினா.கடைசியாக தமிழில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார்.பார்ட்டி,நெஞ்சம் மறப்பதில்லை படங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PK Varma Joins The Cast of Regina Caarthick Raju
அருண் விஜய் நடிக்கும் AV 31,விஷால் நடிக்கும் சக்ரா,கசடதபற உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் அடுத்த படத்தைதிருடன் போலீஸ்,உள்குத்து,கண்ணாடி உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்குகிறார்.

PK Varma Joins The Cast of Regina Caarthick Raju

சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.தற்போது இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக அட்டகத்தி,தனுசு ராசி நேயர்களே,சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த பிகே வர்மா இந்த படத்திலும் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

PK Varma Joins Regina Film