பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. உலக அளவில் ஒரே ஒரு கதாப்பாத்திரம் கொண்டு மட்டுமே இயங்கும் 12 படங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது.

parthiban

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தின் அறிமுக விழா மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. சமீபத்தில் இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களான ஆமீர் கான், கமல்ஹாசன், ரஜினிகாந்த், மோகன் லால், மம்முட்டி ஆகியோர் இப்படத்தின் சிறப்பு பற்றி கூறியிருந்தனர்.

parthiban

parthiban

தற்போது படத்தின் புதிய ப்ரோமோ வெளியானது. பார்த்திபனின் இந்த படைப்பை காண மிகவும் ஆர்வத்தில் உள்ளனர் திரை விரும்பிகள்.