இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் திரைப்படம் இந்தியன் 2. உலகநாயகன் கமல் நடிக்கும் இத்திரைப்படத்தில், சித்தார்த், டெல்லி கணேஷ், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தியன் 2-வின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பில் க்ரேன் சரிந்து ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குனர் உட்பட மூவர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.

kamalhaasan

இதையடுத்து நடிகர் பார்த்திபன் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, 'தினமும் ஏதாவது நல்ல செய்தியோடு விடியும் என்றே எதிர்ப்பார்க்கிறோம். ஆனால் இன்றைய விடியல் அப்படி இல்லை. விபத்தில் உதவி இயக்குநர் இறந்ததாக அறிந்தேன், உதவி இயக்குநர்கள் பெரும் கனவோடு பலவற்றை தியாகம் செய்து இத்துறையை தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களின் கனவும் சேர்ந்து அறுந்து விழுந்திருக்கிறது. 

kamalhaasan parthiban

எனது அடுத்த படத்தில் நிறைய க்ரேன் காட்சிகள் உள்ளன. மழைக்காட்சியும் நெருப்பு எரியும் காட்சியும் உள்ளது. அதை நினைத்தால் இப்போது பயமாக இருக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு எனது இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டிக்கொள்கிறேன்.