தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் கிருத்திகா உதயநிதி அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா மற்றும் ப்ரியா ஆனந்த் இணைந்து நடித்த வணக்கம் சென்னை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த காளி படத்தையும் இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.

அந்த வகையில் அடுத்ததாக இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தயாராகியுள்ளது பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸ். காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், ரேணுகா, கௌரி கிஷன், கருணாகரன், சின்னி ஜெயந்த், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ், GM.குமார், அபிஷேக், பிரியதர்ஷினி ஆகியோர் இணைந்து பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸில் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.

அழகான ஃபீல் குட் வெப்சீரிஸாக வருகிற ஜூன் 29-ம் தேதி முதல் ZEE5 தளத்தில் ஒளிபரப்பாகவுள்ள பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸை ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸுக்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார்.

சைமன்.K.கிங், வேத்ஷங்கர் மற்றும் தரண் குமார் ஆகிய 3 இசையமைப்பாளர்கள் பேப்பர் ராக்கெட் வெப்சீரிஸின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர். இந்நிலையில் பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸில் இருந்து இசையமைப்பாளர் வேத்ஷங்கர் இசையில் "சூப்பர் சிங்கர்" புகழ் ஸ்ரீகாந்த் ஹரிஹரன் பாடியுள்ள “ஒரு கன்னி” பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அந்தப் பாடல் இதோ…