தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியான கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் நிறுவனம் சன் தொலைக்காட்சி.மக்களின் மனம் கவர்ந்த சீரியல்கள்,திரைப்படங்கள்,புதிய கேம் ஷோக்கள் என்று ரசிகர்களுக்காக புதிதாக ஏதேனும் ஒன்றை செய்து வருவார்கள்.சன் டிவியின் சீரியல்களுக்கென்றும்,ஷோக்களுக்கு என்றும் தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது அனைவரும் அறிந்ததே.

பல சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்து விட்டன.கொரோனா தாக்கம் காரணமாக சில தொடர்கள் எந்த காரணமுமின்றி கைவிடப்பட்டன.சில தொடர்கள் நட்சத்திரங்கள் பங்கேற்க முடியாததால் கைவிடப்பட்டன.பல தொடர்கள் முடிக்கப்பட்டாலும் ரசிகர்கள் மனதை கவரும் படி புதிய சீரியல்களை சன் டிவி நிறுவனம் ஒளிபரப்பி வருகின்றது..

கடந்த 2019 முதல் சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டவர் இல்லம்.இந்த தொடரில் பாப்ரி கோஷ் ஹீரோயினாக நடித்து வருகிறார்,மற்றொரு ஹீரோயினாக ஆதித்யா டிவி,சன் டிவி உள்ளிட்ட சேனல்களில் பல சூப்பர்ஹிட் ஷோக்களை தொகுத்து வழங்கிய ஆர்த்தி சுபாஷ் நடித்து வருகிறார்.க்ரித்திகா அண்ணாமலை,அணு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் க்ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.தற்போது தனது ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.