ஓ மை கடவுளே படத்தின் ஸ்னீக் பீக் காட்சி !
By Sakthi Priyan | Galatta | February 14, 2020 09:53 AM IST

அசோக் செல்வன், ரித்திகா சிங் நடித்துள்ள படம் ஓ மை கடவுளே. அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். பிரபல தொலைக்காட்சி நடிகை வாணி போஜனும் நடித்துள்ளார். அக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி இப்படத்தை தயாரித்துள்ளது. நேற்று இந்த படத்தின் ப்ரஸ் காட்சி திரையிடப்பட்டது. விமர்சகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பை பெற்றது இப்படம்.
படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் இளைஞர்கள் விரும்பும் வகையில் இடம்பெற்றுள்ளது. லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். U/A சான்றிதழ் வழங்கப்பட்ட இப்படம் இன்று வெளியானது. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை ஏ.பி.இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என சமீபத்தில் தகவல் தெரியவந்தது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தற்போது படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது.
Ranga Tamil Movie Theeramal Single Song Video | Sibiraj | Anirudh
14/02/2020 10:21 AM
Vijay's Master Oru Kutti Kathai song set in jail or college hostel
13/02/2020 08:09 PM
Sivakarthikeyan's Doctor new schedule to begin tomorrow! Latest Update!
13/02/2020 07:39 PM