தமிழ் திரையுலகில் சிறந்த நடிகைகளுள் ஒருவர் நிவேதா பெத்துராஜ். ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது, படங்கள் பார்ப்பது என லாக்டவுன் நேரத்தில் நேரத்தை செலவு செய்து வருகின்றனர். 

nivethapethuraj

இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சின்ன வயதில் இருந்தே எனக்கும் என் குடும்பத்திற்கும் விவேக் சார்-னா ரொம்ப புடிக்கும். அவரது காமெடியில் சோஷியல் மெசேஜஸ் அதிகம் இருக்கும். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தாராள பிரபு படத்தை பார்த்து ரசித்தோம். சிறந்த நடிகர் என்பதை தாண்டி சீரான சமூக ஆர்வலரும் கூட. மரம் நடுதல் போன்ற நல்ல காரியங்கள் செய்து வருகிறார் என சின்ன கலைவானர் விவேக் பற்றி புகழ்ந்துள்ளார் நிவேதா பெத்துராஜ். 

Vivek

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகிய திரைப்படம் தாராள பிரபு. பிரபல ஹிந்தி படமான விக்கி டோனார் படத்தின் தமிழ் ரீமேக்காகும். இதில் தான்யா ஹோப் நாயகியாக நடித்துள்ளார். படத்தில் விவேக் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஹீரோ பணத்திற்காக விந்தணுவை தானம் செய்பவர் என்பது தான் கதைக்கரு. கிருஷ்ணா மாரிமுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார்.