தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

master

டெல்லி கல்லூரியில் நடந்த படப்பிடிப்பில் VJ ரம்யா, 96 புகழ் கௌரி கிஷன், இணையதள புகழ் பிரிகிடா போன்றோர் நடித்தனர். ஷிவமோகாவில் நடக்கும் படப்பிடிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கலந்து கொண்டார் என்ற தகவல் தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் விஜய்சேதுபதி அரசியல் வாதியாக நடிக்கிறார் என்ற தகவலும் கிடைத்தது. 

nagendraprasad nagendraprasad

சமீபத்தில் இதன் முதல் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பியது. இந்த படத்தில் நடிக்கும் நாகேந்திர பிரசாத் படம் உருவான விதம் குறித்தும், படத்தில் நடித்த அனுபவம் பற்றியும் கலாட்டா குழுவுடன் பகிர்ந்துள்ளார். தளபதி விஜய் எப்படி இருந்தாரோ இன்று வரை அப்படியே தான் இருக்கிறார். அதே அமைதியான சுபாவம், அதே நேர்மை. அனைத்து விஷயங்களையும் சரியாக கவனித்துக்கொள்கிறார். அனைவரிடமும் அன்பாக ஓர் நண்பன் போன்று நடந்து கொள்வதால் தான் தளபதியாக திகழ்கிறார். 

nagendraprasad

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்யுடன் ஓர் பாடலுக்கு ஆடியுள்ளேன். தினேஷ் மாஸ்டர் இந்த பாடலை கோரியோகிராஃப் செய்துள்ளார். நடனக்கலைஞர்களே கஷ்டப்படும் சில ஸ்டெப்ஸுக்கு அசால்ட்டாக ஆடி அசத்திகிறார். இந்த பெருமையெல்லாம் ராஜு சுந்தரம் மாஸ்டரையே சேரும். விஜய் நண்பர்கள் செட்டில் இருப்பதால் ஏதோ பார்ட்டிக்கு போவது போல் உள்ளது. ஒரு காட்சியில் புகை பிடிப்பது போல் இருந்தது. அதிக டேக் சென்றதால் மீண்டும் புகைப்பது போல் அமைந்தது. காட்சியை முடித்து வந்தவுடன், தளபதி என்னிடம் எத்தனை சிகரெட் அடிச்சேனு கேட்டார்.