மாஸ்டர் படத்தின் விநியோக உரிமம் பற்றிய தகவல் !
By Sakthi Priyan | Galatta | January 08, 2020 14:19 PM IST
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
டெல்லி கல்லூரியில் நடந்த படப்பிடிப்பில் VJ ரம்யா, 96 புகழ் கௌரி கிஷன், இணையதள புகழ் பிரிகிடா போன்றோர் நடித்தனர். ஷிவமோகா படப்பிடிப்பு முடிந்து தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அரசியல் வாதியாக நடிக்கிறார் என்று பேசப்படுகிறது.
சமீபத்தில் இதன் முதல் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பியது. படத்தின் விநியோக உரிமையை செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோ கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியானது. மேலும் இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்பதும் தெரியவந்தது. தற்போது வெளிநாட்டு விநியோக உரிமையை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.