தமிழ் திரையுலகில் பல ஹீரோ ஹீரோயின்களை தனது நடன இயக்கத்தால் இயக்கியவர் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா. பல வெற்றி படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார். உலகநாயகன் கமல் ஹாசன் நடித்த நம்மவர் படத்தில் நடித்திருப்பார். 

BrindhaMaster

கொரோனா பாதிப்பால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்களும் தங்களால் முடிந்த விழிப்புணர்வு பதிவுகள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, நடனமாடிக்கொண்டே வீட்டை சுத்தம் செய்வது போல் வீடியோ ஒன்றை வெளியிட்டு அசத்தியுள்ளார். கமல் ஹாசன் நடித்த நம்மவர் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு பிருந்தா நடனமாடியுள்ளார். கடந்த 1994-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் பிருந்தாவும் முக்கிய ரோலில் நடித்திருந்தார். 

HeySinamika

தற்போது நடிகர் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் வைத்து ஹே சினாமிகா என்ற படத்தை இயக்கவுள்ளார். பிருந்தா இயக்குனராக களமிறங்கும் முதல் படம் இதுதான்.