சுரபி ஃபிலிம்ஸ் சார்பில் S.மோகன் தயாரித்த திரைப்படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். இயக்குனர் சரண் இயக்கிய இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஆரவ் நாயகனாக நடித்திருந்தார். நாயகியாக காவ்யா தப்பார் நடித்தார். நாசர், ராதிகா சரத்குமார், ரோகிணி போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்தனர். 

aarav

கோபி கிருஷ்ணா எடிட்டிங் செய்த இந்த படத்திற்கு கே வி குகன் ஒளிப்பதிவு செய்திருந்தார். சைமன் கே கிங் இசையமைத்துள்ளார். சரணின் வித்தியாசமான திரைக்கதை அமைப்பில் அவரது வழக்கமான பாணியில் காமெடி திரில்லர் என அனைத்தும் அடங்கிய ஆக்‌ஷன் படமாக உருவாகியது இந்த மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். 

aarav aarav

தற்போது படத்திலிருந்து தாதா வீடியோ பாடல் வெளியானது. பிரதீப், ரோகேஷ் மற்றும் வின்ஸ்லேட் பாடிய இந்த பாடல் வரிகளை ரோகேஷ் எழுதியுள்ளார். பாடல் வீடியோ லிங்க் கீழே உள்ளது.