பிரம்மாண்ட சாதனை படைத்த மகேஷ்பாபுவின் புதிய படம்!-வேற லெவல் மாஸ்!
By Anand S | Galatta | August 01, 2021 17:57 PM IST

தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வளம் வரும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு கடைசியாக நடித்து வெளிவந்த திரைப்படம் சரிலேரு நீக்கவ்வரு. முன்னணி தெலுங்கு இயக்குனரான அனில் வரிப்புடி சரிலேரு நீக்கவ்வரு திரைப்படத்தை இயக்கினார். இதனையடுத்து தற்போது நடிகர் மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் சர்காரு வாரி பாட்டா.
சர்காரு வாரி பாட்டா படத்தில் நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் பரசுராம் எழுதி இயக்கும் சர்காரு வாரி பாட்டா படத்தில் ஒளிப்பதிவாளர் மதி ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் தமன் இசை அமைக்கிறார்.
சர்காரு வாரி பாட்டா படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் நடிகர் மகேஷ் பாபு தன்னுடைய G.மகேஷ்பாபு என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் இணைந்து தயாரிக்கிறார். முன்னதாக சர்காரு வாரி பாட்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. நடிகர் மகேஷ் பாபுவின் மாஸான இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இந்நிலையில் தற்போது சர்காரு வாரி பாட்டா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய சாதனையை ட்விட்டரில் படைத்துள்ளது. அதிக லைக்குகளையும் அதிக முறை ரீட்வீட் செய்யப்பட்ட ஃபர்ஸ்ட் லுக்காகவும் சர்காரு வாரி பாட்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ட்விட்டரில் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.
Super🌟@urstrulyMahesh sets a new benchmark. #SVPFirstNotice becomes the MOST LIKED & RETWEETED Poster of TFI on Twitter in 24hrs🔥
— Haricharan Pudipeddi (@pudiharicharan) August 1, 2021
#SarkaruVaariPaata 🔔@KeerthyOfficial @ParasuramPetla @MusicThaman @madhie1 @MythriOfficial @GMBents @14ReelsPlus pic.twitter.com/EU4itd1FLP
Watch the new promo glimpse from Dulquer Salmaan's next film with Mrunal Thakur!
01/08/2021 03:24 PM