மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். 

மதுரை ரயில் நிலையம் அருகில் உள்ள எல்லீஸ் நகர் மேம்பாலத்தின் அருகே, இளைஞர் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல், திடீரென்று அவரைத் கொலை செய்ய முயன்றது. 

Madurai Youth killed

இதில், உயிர் பயத்தில் அவர் ஓடியுள்ளார். அப்போது, ரயில்வே மேம்பாலத்தில் உள்ள படிக்கட்டில் அவர் தப்பித்துச் செல்லும்போது, அவரைத் துரத்தி வந்த மர்ம கும்பல், அவரை சராமாறிய வெட்டி உள்ளது. இதில், ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த கொலைக் கும்பல் தப்பிச் சென்றது.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, படுகொலை செய்யப்பட்ட இளைஞர், வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும், இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Madurai Youth killed

இதனிடையே, மதுரையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி, வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.