தமிழ் மக்களின் மனதில் ஓர் அங்கமாக, நிரந்தர பந்தமாக இருக்கும் ஓர் நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ்.
இதற்கு முக்கிய கரணம் தொழிலதிபர் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன். உழைப்பை கடுகளவு போல் வைத்து கொள்ளாமல், கடலளவு பரப்பி அதில் முழுமூச்சுடன் செயல்பட்டு வரும் இவரது செயல் திறன் போற்றக்கூடியவை.

Legend Saravanan Debut Film Starts With A Pooja

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கோலிவுட் நட்சத்திரங்களுடன் இணைந்து விளம்பர படத்தில் நட்சத்திரமாய் ஜொலித்தார். சினிமா நடிகர்கள், கிரிக்கெட் வீரர்களை தொடர்ந்து தொழிலதிபர் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அவர்களுக்கும் ரசிகர்கள் வரத்துவங்கினர். வீட்டில் ஒருவராய் கொண்டாட துவங்கினர்.

Legend Saravanan Debut Film Starts With A Pooja

தொழிலதிபர் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவலை நாம் முன்னரே தெரிவித்திருந்தோம்.இவர் ஹீரோவாக நடிக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

Legend Saravanan Debut Film Starts With A Pooja

இந்த படத்தை உல்லாசம்,விசில் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜேடி ஜெரி இயக்குகிறார்.ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.ஆன்டனி ரூபன் இந்த படத்தின் எடிட்டராக ஒப்பந்தமாகியுள்ளார்.வேல்ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

Legend Saravanan Debut Film Starts With A Pooja