தமிழ் மக்களின் மனதில் ஓர் அங்கமாக, நிரந்தர பந்தமாக இருக்கும் ஓர் நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ். இதன் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன் திரைப்படத்தில் நாயகனாக நடிக்கப்போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதில் அவருக்கு ஜோடியாக மாடல் நாயகி கீத்திகா திவாரி நடிக்கவுள்ளார். 

saravanastores

இந்நிலையில் இவர் சொந்த தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கும் புரடக்‌ஷன் நம்பர் 1 திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. ஜே.டி-ஜெரி கூட்டணி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். 

saravanastores

தற்போது வெளியான செய்தி என்னவென்றால், ரூ.10 கோடி செலவில் மிக பிரமாண்டமாக அரண்மனைப்போல் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடந்தது. இதில் ஒவ்வொரு காட்சியிலும் லெஜெண்ட் சரவணனின் நடனத்தை பார்த்து வியந்து அத்தனை நடன கலைஞர்களும் கை தட்டி பாராட்டினர்.