இயற்கை, ஈ, பேராண்மை போன்ற சிறந்த படைப்புக்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படம் லாபம். சமூக அக்கறை மிகுந்த கதையை பேசும் ஜனநாதனின் திரைமொழிக்கு தனி ரசிகர்கள் உண்டு. 

laabam laabam

புறம்போக்கு படத்தில் விஜய் சேதுபதியை இயக்கிய ஜனநாதன், இரண்டாவது முறையாக லாபம் படத்தை இயக்கி வருகிறார். ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும், ஜகபதி பாபு, சாய் தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

laabam laabam

தற்போது இப்படத்திலிருந்து யாழா என்ற பாடலின் முன்னோட்டம் வெளியாகியது. ஸ்ருதி ஹாசன் பாடிய இந்த பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். இனிமையான இந்த பாடலை தன் காந்த குரலால் மேலும் மெருகேற்றியிருக்கிறார் ஸ்ருதி.