கன்னட திரை உலகின் முன்னணி கதாநாயர்களில் ஒருவராக திகழும் நடிகர் கிச்சா சுதீப் கதாநாயகனாக மட்டுமல்லாமல் பல முக்கிய கதாபாத்திரங்களிலும், வில்லனாகவும் மிக முக்கிய கதாப்பாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து இந்திய சினிமா ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.

குறிப்பாக எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் வெளிவந்த நான் ஈ  திரைப்படத்தில் மிக சிறப்பாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் மிக பிரபலமடைந்தார். தொடர்ந்து இந்திய திரை உலகில் பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வரும் கிச்சா சுதீப் நடிப்பில் அடுத்ததாக வெளிவர உள்ள திரைப்படம் விக்ராந்த் ரோணா. 

கிச்சா சுதீப் நடிப்பில் ஃபேண்டஸி-ஆக்ஷன் அட்வென்ச்சர் திரைப்படமாக கிச்சா கிரியேஷன்ஸ், ஷாலினி ஆர்ட்ஸ் மற்றும் இன்வெனியோ பிலிம்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள விக்ராந்த் ரோணா திரைப்படத்தை பிரபல இயக்குனர் அனுப் பண்டாரி எழுதி இயக்கியுள்ளார்.

விக்ராந்த் ரோணா திரைப்படத்தில் சுதீப் உடன் இணைந்து நிரூப் பண்டாரி, நீதா அசோக், ஜாக்குலின் பெர்னாண்டஸ், ரவி சங்கர் கௌடா, மதுசூதன் ராவ் மற்றும் வாசுகி வைபவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வில்லியம் டேவிட் ஒளிப்பதிவில் அஜனீஷ் லோக்நாத் விக்ராந்த் ரோணா படத்திற்கு இசையமைத்துள்ளார். 

ரசிகர்களை கவரும் வகையில் 3டி தொழில்நுட்பத்தில் வெளிவரும் விக்ராந்த் ரோணா திரைப்படம் வருகிற ஜூலை 28-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக விக்ராந்த் ரோணா திரைப்படத்திலிருந்து வெளியான ரா ரா ராக்கம்மா பாடல் ட்ரெண்டடித்த நிலையில் தற்போது ரா ரா ராக்கம்மா வீடியோ பாடலின் டீசர் வெளியானது. அந்த பாடல் டீசர் இதோ…