தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மகாநதி படத்தின் வெற்றிக்கு பிறகு உலகளவில் பிரபலமான நடிகையாகிவிட்டார். சிறந்த நடிப்பிற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதன் பின் பல பாலிவுட் பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தது. சமீபத்தில் இவரது நடிப்பில் பெண்குயின் திரைப்படம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

Keerthy Suresh Gets Back To Learning Violin During Lockdown

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ள கீர்த்தி சுரேஷ், சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இந்த லாக்டவுனை சரியாக பயன்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் வயலின் வாசிப்பதில் ஆர்வம் காட்டுகிறார் கீர்த்தி. மேலும் வயலின் வாசிக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். நடிப்பு தவிர்த்து பாடல் பாடுவதிலும் பட்டையை கிளப்பும் கீர்த்தி, தற்போது இசை கருவிகளை வாசிப்பது ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Keerthy Suresh Gets Back To Learning Violin During Lockdown

நரேந்திர நாத் இயக்கத்தில் உருவாகி வரும் மிஸ் இந்தியா, சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த, நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் குட் லக் சகி, வெங்கி இயக்கத்தில் ரங் தே போன்ற படங்கள் கீர்த்தி சுரேஷ் கைவசம் உள்ளது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Utilising this time to brush up my old skills of playing the Violin.. #HappyMusicDay . . . #instadaily #instagood #instamood #music #instamusic #violin #violinista #musicday #nykediaries

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial) on