மாஃபியா படத்தின் ரன்-டைம் பற்றிய சிறப்பு தகவல் !
By Sakthi Priyan | Galatta | February 15, 2020 19:06 PM IST

தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி கண்டவர் நடிகர் அருண் விஜய். தனது செகண்ட் இன்னிங்ஸில் தொட்டதெல்லாம் வெற்றியாக இவருக்கு அமைந்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கிய தடம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்நது துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிய மாஃபியா படத்தில் நடித்துள்ளார். லைகா ப்ரொடுக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். பிரியா பவானி ஷங்கர் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
பிரசன்னா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் வேடன் வந்தாச்சோ பாடல் வெளியாகி பட்டையை கிளப்பியது. தற்போது படத்தின் ரன்டைம் 112 நிமிடங்கள் என தெரியவந்தது. 1 மணி நேரம் 52 நிமிடம் இருப்பதால் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Official: Kannum Kannum Kollaiyadithaal New Trailer to release on Feb 18!
15/02/2020 07:13 PM
Server Sundaram director Anand Balki apologizes! Latest statement here
15/02/2020 06:36 PM
Master new HD photos | Thalapathy Vijay | Oru Kutti Kadhai
15/02/2020 06:26 PM