தயாரிப்பாளராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக அவதரித்து அசத்தி வருபவர் உதயநிதி ஸ்டாலின்.அரசியல் குடும்பத்தில் பிறந்த இவர் அரசியலிலும் தனது முத்திரையை பதித்து 2021-ல் நடைபெற்ற தேர்தலில் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்று MLA-வாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடிப்பில் கடைசியாக நெஞ்சுக்கு நீதி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கடந்த சில வருடங்களாக அரசியலில் செம பிஸியாக இருந்தாலும் படங்களில் நடிப்பதையும் தொடர்ந்து செய்து வந்தார் உதயநிதி ஸ்டாலின்.இதனை தொடர்ந்து கண்ணை நம்பாதே,மாமன்னன்,கலகத்தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார் உதயநிதி ஸ்டாலின்.

தயாரிப்பாளராக பல தரமான படைப்புக்களை  விநியோகம் செய்தும் வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.ரெட் ஜெயண்ட் மூவிஸ் பல வெற்றிப்படங்களின் அங்கமாக இருந்து வருகிறது. நிறுவனம் தொடங்கப்பட்டு 15ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் தங்களுடன் பணியாற்றிய பலரையும் கௌரவித்து சிறப்பித்தனர் ரெட் ஜெயண்ட் குழுவினர்.

இந்த விழாவில் கமல்ஹாசன்,அமீர் கான்,சிலம்பரசன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.இதில் பேசிய கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் அடுத்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிப்பார் என்ற அறிவிப்பினை தெரிவித்தார் கமல்.இதுகுறித்து உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங்  விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.