மாநகரம் புகழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளி விருந்தாய் வெளியாகி அசத்தியுள்ள படம் கைதி. இப்படம் முழுவதுமே இரவு நேரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படம் அமோக வரவேற்பை பெற்றது.

kaidhi

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் இதனை எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தயாரித்துள்ளனர். இதில் கார்த்தியுடன் இணைந்து நரேன், ஜார்ஜ் மரியன், ரமணா, தீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம்.சி.எஸ். பின்னணி இசை அமைத்துள்ளார்.

ajaydevgan

இப்படத்தின் பாலிவுட் ரீமேக் உரிமத்தை நடிகர் அஜய் தேவ்கன் கைப்பற்றியுள்ளதாக செய்தி பரவியது. இச்செய்தி முற்றிலும் தவறானது என்ற தகவல் நெருங்கிய திரை வட்டாரம் மூலம் தெரியவந்தது.