கல்யாணத்திற்குப் பெண் கிடைக்காத விரக்தியில் போலீஸ் தற்கொலை செய்துகொண்டார்.

கடலூர் மாவட்டம் வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான ராஜேஷ்குமார், உளுந்தூர்பேட்டை 10 வது பட்டாலியனில் 2 ஆம் நிலைக் காவலராகப் பணியாற்றி வந்தார்.

policeman commits suicide

பணியிலிருந்த அவர் 4 நாட்கள் விடுப்பு எடுத்து சொந்த ஊருக்குச் சென்றார். இந்நிலையில், 4 நாளான இன்றுடன் விடுமுறை நிறைவு பெறும் நிலையில், காலையில் அவரது வீட்டு மாடியில் பூச்சி மருந்தைக் குடித்துவிட்டு, இறந்து கிடந்துள்ளார்.

இது குறித்து விரைந்து வந்த புதுச்சத்திரம் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ராஜேஷ்குமாரின் ஜாதகத்தில் தோஷம் இருந்ததாகவும், திருமணம் ஆவதில் தாமதம் ஆகும் என்று ஜோதிடர்கள் கூறியதாகத் தெரிகிறது. இதனால், கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்ட அவர், வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து, திருமணத்திற்குப் பெண் கிடைக்காத விரக்தியின் விழிப்பு நிலையிலிருந்த அவர், இன்று காலை தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

policeman commits suicide

இதனைத்தொடர்ந்து அவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதனிடையே, திருமணத்திற்குப் பெண் கிடைக்காத விரக்தியில், போலீசார் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.