தமிழ் திரையுலகில் வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து அசத்துபவர் நடிகை காஜல் பசுபதி. கோ, மௌனகுரு, இரும்பு குதிரை உள்ளிட்ட படங்களில் இவரது வித்தியாசமான நடிப்பு ரசிகர்களை ஈர்த்தது. இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு உலகளவில் பிரபலமானார். 

Kaajal Pasupathi Shares Her School Group Photo

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது, பழைய நினைவுகளை பகிர்வது என சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ளனர். 

Kaajal Pasupathi Shares Her School Group Photo

இந்நிலையில் காஜல் பசுபதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தனது பள்ளிப்பருவத்தில் எடுக்கப்பட்ட ஸ்கூல் க்ரூப் போட்டோவை பகிர்ந்துள்ளார். பத்தாம் வகுப்பு நினைவுகள்.. இதில் என்னை கண்டுபிடிக்க முடிகிறதா ? எப்படி இருக்கேன் பார்த்தீர்களா என பதிவிட்டுள்ளார். புகைப்படத்தை கண்ட ரசிகர்கள், சரியாக கண்டுபிடித்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#tenthclassmemories 😭 Can you find me 😄😁😂#paahhh 😰appadi irukan 😂😂

A post shared by kaajal Pasupathi (@kaajal_pasupathi) on