கோமாளி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து ஜெயம் ரவி பூமி,ஜன கன மன,பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.பூமி படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Jayam Ravi Jana Gana Mana Yuvan Starts Composing

இதனை அடுத்து இவர் நடிக்கும் ஜன கன மன படத்தினை மனிதன்,என்றென்றும் புன்னகை உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்குகிறார்.இந்த படத்தில் டாப்ஸீ ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

Jayam Ravi Jana Gana Mana Yuvan Starts Composing

தற்போது இந்த படத்தின் கம்போசிங் வேலைகளை படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தொடங்கியுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் இயக்குனர் அஹமத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.