ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் படம் பிரேக்கிங் நியூஸ். இந்த படத்தில் ஜெய் ஜோடியாக பானுஸ்ரீ நடிக்கிறார். தெலுங்கு பிக்பாஸ் மூலம் பிரபலமான இவர் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

jai

படத்தில் ஜெயப்பிரகாஷ், இந்திரஜா, சந்தனா பாரதி, மோகன் ராம், பழ.கருப்பையா, பி.எல்.தேனப்பன், மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரேக்கிங் நியூஸ் சமூகத்தின் நலனுக்காக சூப்பர் ஹீரோவாக மாறும் ஒரு சாதாரண மனிதனை சுற்றி நிகழும் ஒரு ஃபேண்டஸி ஆக்‌ஷன் படமாகும்.

jai

தற்போது படத்தில் சர்வதேச தரத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் இடம்பெறவுள்ளதாம். குறிப்பாக 100 நிமிடம் கொண்ட கிராஃபிக்ஸ் காட்சி இடம்பெறவுள்ளது. இயக்குனர் சிவாஜி, அந்நியன், முதல்வன் போன்ற படங்களில் விஷுவல் எஃபெக்ட்ஸ் அணியில் பணியாற்றியவர் என்பது கூடுதல் தகவல். நடிகர் ஜெய் கைவசம் கேப்மாரி, கருப்பர் நகரம் போன்ற படங்கள் உள்ளது.