உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தியன் தாத்தாவான சேனாபதியை மீண்டும் காண ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள். விவேக், டெல்லி கணேஷ், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் போன்ற நடிகர்கள் இதில் உள்ளனர். 

Indian 2 Editing Started Update By Anirudh

சமீபத்தில் இந்தியன்-2 படப்பிடிப்பின் போது க்ரேன் அழுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் உதவி இயக்குநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த சோகத்தில் இருந்து மீண்டு வருவதற்குள், கொரோனா எனும் கொடிய வைரஸ் பரவி உலகையே வாட்டி வதைக்கிறது. லாக்டவுன் காரணமாக திரைத்துறை சார்ந்த அனைத்து பணிகளும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது சமூக இடைவெளியுடனும், பாதுகாப்புடனும் பல திரைப்படங்களின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. 

Indian 2 Editing Started Update By Anirudh Indian 2 Editing Started Update By Anirudh

இந்நிலையில் இந்தியன் 2 படத்திற்கான எடிட்டிங் பணிகள் துவங்கப்பட்டுள்ளது என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் அனிருத், இன்ஸ்டாகிராம் லைவ்வில் தோன்றி இந்த அப்டேட்டை வழங்கியுள்ளார். அப்போது பேசியவர், இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனரோடு பணிபுரிகிறேன், சிறந்த ட்யூன்களை தர முடிகிறது. இந்தியன் 2 ஆடியோ லான்ச் தேதிக்காக காத்திருக்கிறேன் என்றார்.