இசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா.இவரது நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு,நட்பே துணை இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

HipHop Thamizha Aadhi Records Song With Poovaiyar

இந்த இரண்டு படங்களையுமே இயக்குனர் சுந்தர் சி தயாரித்திருந்தார்.இதனை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடிக்கும் நான் சிரித்தால் படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்குகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

HipHop Thamizha Aadhi Records Song With Poovaiyar

ஹிப்ஹாப் தமிழா தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.பிகில் படத்தில் இடம்பெற்ற வெறித்தனம் பாடலை தளபதியுடன் இணைந்து பாடிய சூப்பர் சிங்கர் புகழ் பூவையாருடன் இணைந்து ஒரு பாடல் பண்ணியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.இது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இது எந்த படத்திற்கு என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.